விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்!

Published

on

மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவை வைத்து எடுத்திருக்கும் படம் என்ற ஆர்வத்தில் படத்தை பார்க்க போன அனைவருக்கும் காற்றின் மொழி ஏமாற்றத்தையே தந்துள்ளது.

வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியான தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்கை தமிழில் ஜோதிகாவை வைத்து ராதாமோகன் இயக்கினார். ஆனால், அந்த படத்தில் இருந்த எதார்த்தம் இந்த படத்தில் நாடகத் தனமாக மாறவே படத்தின் தடம் புரண்டுவிட்டது.

ஜோதிகாவின் கணவர் வித்தார்த், ஜோதிகாவின் தம்பி போலவே இருக்கிறார். இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரில் சுத்தமாகவே செட்டாகவில்லை. டர்ட்டி பொண்டாட்டி என்ற பாடலில் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் செய்து இருவரும் நடித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

காற்றின் மொழி கதை தான் என்ன?

தனக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என விரும்பு ஜோதிகா, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் வரும் ஒரு நிகழ்ச்சியின் ஆர்.ஜே. ஆக ஆகிறார். ஆர்.ஜே. ஆவது இவ்வளவு சுலபமா என்பதிலிருந்து படத்தில் எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள் ஒருபுறம். மற்றொரு புறம் தொய்வான திரைக்கதை நகர்வும், கதாபாத்திர சித்தரிப்பும் கடுப்பை கிளப்புகிறது.

ஜோதிகாவின் பழைய ஓவர் ஆக்டிங்கை மீண்டும் இந்த படத்தில் ஏன் தான் ராதா மோகன் கொண்டு வந்துவிட்டாரோ தெரியவில்லை. சமீபத்தில் ஜோதிகா நடித்த நல்ல படங்களின் லிஸ்டில் இடம் பிடிக்க காற்றின் மொழி தவறி விட்டது.

அந்தரங்க விசயங்கள் சம்பந்தபட்ட போன் கால் நிகழ்ச்சி என்பதால், குடும்பத்தில் இருந்து ஜோதிகாவிற்கு எதிர்ப்பு கிளம்புகிறது. அதனை அவர் சமாளித்தாரா? பெண்களின் உரிமையை எப்படி நிலை நாட்டுகிறார் என்பதே படத்தின் கதை.

ஜோதிகா – ராதா மோகன் படத்தின் ஏன் இத்தனை இரட்டை அர்த்த வசனங்கள் என்ற கேள்வி அனைவரையும் கேட்க தூண்டுகிறது.

ஒரு சில இடங்களில் ஜோதிகா தனது அசத்தலான நடிப்பால் ஸ்கோர் செய்கிறாரே தவிற படத்தில் பெரிதளவில் அவரது பங்கு கைகொடுக்கவில்லை.

ராதா மோகன் சார் அடுத்த படமாவது ரீமேக் படம் இல்லாமல், உணர்வுபூர்வமான உங்களது கதையை எடுத்தால் நிச்சயம் ரசிகர்கள் உங்களுக்காக பார்க்க வருவார்கள். அதை இனியும் இழந்து விட வேண்டாம்.

மொத்தத்தில் காற்றின் மொழி – காட்சி பிழை!

மார்க்: 25/100.

Trending

Exit mobile version