சினிமா செய்திகள்

’காதல்’ இயக்குனர் பாலாஜி சக்திவேலின் அடுத்த படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Published

on

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ’காதல்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் பரத். சந்தியா நடித்த இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் அனைவரையும் உருக்கும் வகையில் இருந்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலிலும் பணத்தை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் இயக்கிய ’கல்லூரி’ திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும், இந்த படத்தில்தான் தமன்னா மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாலாஜி சக்திவேல் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’நான் நீ நாம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வீரா மற்றும் சாந்தினி தமிழரசன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மற்ற நடிகர் நடிகைகளின் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியாஸ் இசையில், சுரேஷ்குமார் ஒளிப்பதிவில், தீபக் படத்தொகுப்பில் உருவாகயிருக்கும்
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த வருடத்திற்குள் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ’காதல்’ பாடல் போல் ’நான் நீ நாம்’ திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி படமாக பாலாஜி சக்திவேலுக்கு அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version