சினிமா செய்திகள்

Zee Plex-ல் வெளியாகும் கா.பே.ரணசிங்கம்.. ஆனால்?

Published

on

விஜய் சேதுபதியின் கா.பே.ரணசிங்கம் திரைப்படம் Zee Plex தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து திரை அரங்குகளில் படங்கள் வெளியாவது தடைபெற்றுள்ளது. எனவே ஜீ5, அமேசான் பிரைம், நெட்பிள்க்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

அதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு திரைப்படத்துக்கும் கட்டணம் செலுத்துவது போன்ற ஒரு தளத்தை தயாரிப்பாளர் சி.வி.குமார் தொடங்கினார்.

அதுபோலவே ஜீ எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், பார்வையாளர்கள் பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய Zee Plex சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழில் முதற்கட்டமாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள விஜய் சேதுபதியின் கா.பே.ரணசிங்கம் மற்றும் சந்தானத்தின் டிகிலோனா திரைப்படங்கள் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

சி.வி.குமாரின் ரீகல் சினிமாஸ் இதுவரை எந்த ஒரு புதுத் திரைப்படங்களையும் வெளியிடாத நிலையில், ஜி பிளக்ஸில் புதிய படங்கள் வெளியாக உள்ளன.

தமிழ் திரை அரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆன்லைன் தளங்களில் படங்கள் வெளியாகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபக்கம் புதுப்புது ஆன்லைன் தலங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

Trending

Exit mobile version