தொழில்நுட்பம்

களமிறங்கும் “ஒன்பிளஸ் 6டி மெக்லாரன்” ஸ்பெஷல் எடிஷன்.!

Published

on

ஒன்பிளஸ் ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் மாடலை வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி, “ஒன்பிளஸ் 6டி மெக்லாரன்” ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை லண்டனில் வெளியிடுமென்றும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் 12 ஆம் தேதி இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னனி ஆட்டோமோட்டிவ் நிறுவனமான மெக்லாரன் நிறுவனத்துடன் இணைந்து ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. “சல்யூட் டு ஸ்பீட்” என்ற டேக்லைனுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் ஸ்மார்ட் போன் 10ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் வெளியிடப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் 10 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் போன் மஞ்சள் மற்றும் வைப்ரன்ட் ரெட் நிறத்தில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version