விமர்சனம்

ஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே பல்வேறு திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. அதிலும் முதல் முறையாக ஒரு படத்தைப் பார்க்கக் கட்டணம் செலுத்தும் ஜி பிளக்ஸ் சேவையில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதுவரை விஜய் சேதுபதியுடன் ஐஷ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்து இருந்தாலும், அவை எல்லாம் கெஸ்ட் ரோல் போன்று தான் இருக்கும். ஆனால் க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக இருக்க விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்று கூறலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதற்காக குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷின் கணவன். குடும்ப சூழல் காரணமாக, வேலைக்காகத் துபாய் செல்கிறார். அங்கு வேலைக்காக செல்லும் இந்தியர்கள் என்னவெல்லாம் கொடுமைகளை சந்திக்கிறார்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அங்கு ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் தாய் நாட்டுக்கு கொண்டு வருவதில் ஏற்படும் சிக்கல் பற்றி எல்லாம் கதைக்களம் செல்கிறது.

வெளிநட்டுக்கு சென்ற கணவனை மீடக போராடும் மனைவி கதாபாத்திரத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி படத்தில் உள்ளதால், அவரின் பில்டப்புகளுக்காக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகள் காதைக்கு ஒட்டாமலும், இழுவையாகவும் உள்ளன.

சாதாரண ஒரு ஏழை வெளிநாடுகளில் இறந்துவிட்டால், அதனால் அவர்கள் குடும்பம் படும் கஷ்டத்தையும், அதுவே ஸ்ரீதேவி போன்ற பிரபலங்கள் மற்றும் பணக்காரர்கள் வெளிநாடுகளில் இறந்தால் காட்டப்படும் அக்கரை குறித்து காட்டியிருப்பது சிறப்பு.

விஜய் சேதுபதியின் பில்டப் காட்சிகள் படத்திற்கு, தொய்வை ஏற்படுத்தினாலும், ஓடிடியில் நேரடியாக வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் வெற்றி க.பெ.ரணசிங்கம் படம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version