சினிமா செய்திகள்

சீமான் – லிங்குசாமி கதை விவகாரம்: கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி முடிவு

Published

on

கடந்த சில ஆண்டுகளாக சீமான் மற்றும் லிங்குசாமி இடையே கதை பிரச்சனை எழுந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த பிரச்சனைக்கு எழுத்தாளர் சங்க தலைவர் கே பாக்யராஜ் அதிரடி முடிவு எடுத்து உள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சூர்யா நடிக்கும் அஞ்சான் என்ற திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க திட்டமிட்ட போது அந்த கதை தன்னுடையது என்றும் ’பகலவன்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சீமான் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து பஞ்சாயத்து பேசியபோது சர்ச்சைக்குரிய கதையை தான் படமாக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சீமான் குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் அந்த கதையை படமாக்காவிட்டால் தான் அதே கதையை படமாக்குவேன் என்று லிங்குசாமி தெரிவித்து இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் சூர்யா நடித்த அஞ்சான் படத்திற்கு வேறு கதையை அவர் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருடங்கள் பல ஆகியும் ‘பகலவன்’ படம் தொடங்காததால் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்திநேனி நடிக்கும் படத்திற்காக கடந்த சில வருடங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய கதையை பயன்படுத்த இயக்குனர் லிங்குசாமி முடிவு செய்தார். இந்த நிலையில் மீண்டும் சீமான் தன்னுடைய பகலவன் கதையை பயன்படுத்தக்கூடாது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சங்க தலைவர் கே பாக்யராஜ் விசாரணை செய்தபோது சீமானின் புகாரில் முகாந்திரம் இல்லை என்றும் அதனால் லிங்குசாமி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தாராளமாக அந்த கதையினை பயன்படுத்தலாம் என்றும் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து சீமான் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வார்? மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவாரா? அல்லது நீதிமன்றம் செல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version