தமிழ்நாடு

தவறே நடக்கவில்லை என்றால் இழப்பீடு ஏன்? மாணவி விவகாரத்தில் பாஜக பிரமுகர் கேள்வி!

Published

on

மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதற்கு பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாணவியின் தற்கொலை குறித்து கூறியபோது, ‘மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளித்த நிர்பந்தமே காரணமென பாஜக போலியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது; விடுதியில் தனக்கு நேர்ந்த கொடுமையே தற்கொலைக்கு காரணம் என மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்

மாணவி மரணத்தை மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சினையோடு இணைத்து அரசியல் ஆதாயம் அடைய பாஜக முயற்சிக்கிறது; தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்ப முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என்றும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி, ‘மாணவி லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பாஜக-வின் முயற்சி கண்டிக்கத்தக்கது. மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கையும், உயிரிழந்த மாணவியின் பிரச்சினையே இல்லாத நிலையில், தவறாக எதுவும் நடக்காத சூழ்நிலையில்,உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஏன் கோரிக்கை வைக்கிறீர்கள்?

அப்படியானால் இனி தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பீர்களா?மதமாற்ற நிர்பந்தம் இல்லை என உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? மாணவி இறப்பதற்கு முன் பதிவிட்ட காணொளியில் கூறியது பொய் என்கிறீர்களா? விசாரணையே துவங்காத நிலையில், மதமாற்றம் இல்லை என்று நீங்கள் கூறுவதோடு, தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட இல்லாததுவியப்பளிக்கிறது. வெறும் ஓட்டுக்காக ஒரு மதத்திற்கு ஆதரவாக பரிந்து பேசி மதவாத அரசியல் செய்யும் உங்களின் முயற்சியே கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version