இந்தியா

சிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published

on

சாமியார்கள் பாலியல் புகாரில் சிக்குவது இந்தியாவில் புதிதல்ல. பிரபலமாக இருந்த பல சாமியார்கள் மீது பாலியல் வழக்குகள் உள்ளது. பலர் அதில் தண்டனையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பிரபல சாமியார் ஒருவர் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவை சேர்ந்த ஜோதிகிரி மஹாராஜ் என்ற சாமியார் தான் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார் தற்போது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள பகிடா கலா கிராமத்தில் சாமியார் ஜோதிகிரிக்கு சொந்தமான ஆசிரமம் ஒன்று உள்ளது. இவர் சிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் சிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து சாமியார் ஜோதிகிரி தலைமறைவாகியுள்ளார். அந்த வீடியோ குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சாமியார் ஜோதிகிரியை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டவுடன் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version