சினிமா செய்திகள்
‘வாடிவாசல்’ படத்தில் ஜோதிகாவுக்கு கெஸ்ட் ரோலா?
சூர்யா நடிக்க இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகை ஜோதிகா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
சூர்யா தற்போது பாலா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் நாற்பத்து ஒன்றாவது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அடுத்ததாக சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான சோதனை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இந்த படத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய கேரக்டரில் ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் மாவட்ட கலெக்டர்ன் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கேரக்டரில் ஜோதிகா நடிகர் சூர்யா, ஜோதிகா இருவருமே ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது .
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூர்யா மற்றும் ஜோதிகா ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.