சினிமா செய்திகள்

பிரபல மாஸ் ஹீரோவுக்கு கொரோனா: பயம் வேண்டாம் என ரசிகர்களுக்கு தகவல்

Published

on

கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரை உலகினவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். எனது குடும்பம் மற்றும் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளோம். எனவே கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் தற்போது நடித்து வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் குழுவினரும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version