சினிமா

விஜய் ஒரு சூப்பர்ஸ்டார்! – பாராட்டி தள்ளிய ஜூனியர் என்.டி.ஆர்

Published

on

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாகவுள்ளது. பாகுபலி படத்திற்கு பின் இப்படத்தை ராஜமவுலி இயக்கியுள்ளதால் இப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய் பற்றி கருத்து தெரிவிக்குமாறு ஜூனியர் என்.டி.ஆரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘விஜய் ஒரு சூப்பர்ஸ்டார். அவர் எனக்கு சீனியர். என்னை அவர் வழி நடத்துவார்.

அவரின் நடனத்திற்கு நான் ரசிகன். அவரிடம் அடிக்கடி பேசுவேன். மாஸ்டர் படம் பார்த்த பின்னர் அவரிடம் பேசினேன். எவ்வளவு வெற்றி கொடுத்தாலும் அதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருப்பார். அப்படி இருப்பது சுலபமான காரியம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புரமோஷனுக்காக அப்படக்குழுவினர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். சென்னை, மும்பை, கேரளா என எல்லா இடங்களுக்கும் சென்று அவர்கள் அப்படம் பற்றி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version