இந்தியா

ஜூன் மாதத்தில் இத்தனை விடுமுறை நாட்களா? முழு விபரங்கள்

Published

on

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்கள் குறித்த விபரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜூன் மாதம் சனி, ஞாயிறு என மொத்தம் ஆறு நாட்களும் ,விசேஷமாக இரண்டு நாட்களும் என மொத்தம் எட்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விசேஷ இரண்டு நாட்கள் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அந்த ஒரு சில மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் 4 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2-வது 4-வது சனிக்கிழமைகள் என மொத்தம் ஆறு நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதம் விடுமுறை குறித்த முழு விவரங்கள் இதோ

ஜூன் 2 : மகாராணா பிரதாப் ஜெயந்தி – ஷில்லாங்

ஜூன் 15: Y.M.A Day/ குரு ஹர்கோபிந்த் ஜி பிறந்த நாள் / ராஜா சங்கராந்தி – ஐஸாவ்ல், புபவேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர்

இந்த விடுமுறைகள் மட்டுமின்றி, 6 வார இறுதி நாள்களின் போதும் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.. அந்தப் பட்டியல்:

ஜூன் 5: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 11: இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 12: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 19: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 25: நான்காவது சனிக்கிழமை
ஜூன் 26: ஞாயிற்றுக்கிழமை

 

seithichurul

Trending

Exit mobile version