இந்தியா

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வு தேதி அறிவிப்பு: 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீட்தேர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று முன்னர் தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டுக்கான நீட்தேர்வு தேதியை அறிவித்து உள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மே 7-ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version