சினிமா செய்திகள்

பிக்பாஸ் என் புருஷன், பிக்பாஸ் குழந்தை என் வயித்துல வளருது: ஜூலி, அனிதாவின் அட்ராசிட்டிகள்!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சிலர் பிக்பாஸையே கேலியும் கிண்டலும் செய்து வரும் நிலையில் தற்போது எல்லை மீறி பிக்பாஸை தனது கணவர் என்று ஜூலியும், பிக்பாஸ் குழந்தை தனது வயிற்றில் வளர்ந்து வருவதாக அனிதாவும் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் கண்டெண்ட் கொடுப்பதற்காக எல்லை மீறி சில செயல்களை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலி தன்னை பிக்பாஸ் மனைவி என்று கூறிக் கொண்டதும் அதை அனிதா மற்றும் தாமரை கேலியும் கிண்டலும் செய்வதுமாக காட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் அனிதா ஒருபடி மேலே போய் பிக்பாஸ் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஜூலியாவது திருமணம் ஆகாத பெண் என்பதால் அவர் கூறுவதில் அவர் கூறுவதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் திருமணமான அனிதா தனது வயிற்றில் பிக் பாஸ் குழந்தை வளர்கிறது என்று கூறுவது எல்லை மீறிய செயல் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் காமெடிக்காக கூறுவதைப் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனிதாவின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version