தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத காஞ்சி மடாதிபதி: நீதிபதி அதிரடி கருத்து

Published

on

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் இளைய மடாதிபதி கலந்துகொண்டபோது தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது அவர் எழுதி நிற்காமல் உட்கார்ந்து இருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பல அரசியல் கட்சிகள் காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதிக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர் என்பதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு சங்கர மடத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் மடாதிபதிகள் ஆக இருந்தாலும் அரசியல் சட்டம், தேசிய சின்னங்கள், மாநில மாண்புகளை கடை படித்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தாய் வாழ்த்து என்பது இறைவணக்கப் பாடல் தான் என்றும், அது தேசிய கீதம் அல்ல என்றும், தமிழ் தாய் வாழ்த்து பாடும் படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை என்றும் கூறினார். கடந்த 2018 ஆம் ஆண்டு காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காதது குறித்து நீதிபதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version