தமிழ்நாடு

பாஜகவின் பொங்கல் விழாவில் வேட்டி, சட்டையுடன் பங்கேற்ற ஜெ.பி.நட்டா!

Published

on

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, இன்று சென்னை வந்தடைந்தார். அவர் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ‘நம்ப ஊரு பொங்கல்’ விழாவில் வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டார்.

அவர் விழாவில் சிறுப்புரையாற்றிய போது கூறியதாவது,

தமிழகம் என்பது சாதுக்களின், ஞானிக்களின் பூமி. இந்த நாட்டிலிருந்து வந்த கலாச்சாரத்துக்காகவும், பண்பாட்டுக்காகவும் நாங்கள் பெருமைப்படுகிறோம். மொத்த இந்தியாவும் பெருமைப்படுகிறது. தமிழ் என்பது உலகின் மூத்த மொழி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் மொழி செழித்தோங்கி வளர்ந்து வருகிறது.

திருவள்ளுவர் நமக்கு கொடுத்த திருக்குறள் தமிழகத்துக்கு மட்டுமான கொடை அல்ல. அது மொத்த நாட்டிற்குமான கொடை. தமிழகம், இந்தியாவுக்காக கொடுத்தவைகள் ஏராளம். அவை அனைத்தையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். தமிழகத்துக்கு வருவதும், இங்கு வந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதும் எங்களுக்கு மன மகிழ்வைக் கொடுக்கிறது.

தமிழின் மேன்மை புரிந்து தான் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச மேடைகளிலும், இந்தியாவில் தான் ஆற்றும் உரையிலும் தொடர்ந்து சொல்லி வருகிறார். பாஜக குறித்தும், தமிழ்நாடு குறித்தும் பாஜகவும் பிரதமர் மோடியும் மேன்மையாக நினைக்கிறார்கள். அதனால் தான் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிக நிதி ஒதுக்கீட்டையும் செய்து வருகிறார்’ என்று பேசினார்.

Trending

Exit mobile version