இந்தியா

விவசாயிகளை கார் மோதி கொன்ற விவகாரம்: வீடியோ எடுத்த செய்தியாளர் சுட்டுக்கொலை

Published

on

விவசாயிகளை கார் மோதி கொலை செய்ததை வீடியோ எடுத்த செய்தியாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென கார் ஒன்று போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மத்தியில் மோதியது. இதனை அடுத்து 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது.

மேலும் மத்திய அமைச்சர் ஒருவரின் மகன் தான் இந்த காரில் இருந்ததாகவும் அவர் தான் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதை வீடியோ பதிவு செய்தவர் ராமன் காஷ்யப் என்ற செய்தியாளர்.

இவர் அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இதன் பின்னர் இந்த வீடியோ வெளியான பின்னர் தான் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதை வீடியோ பதிவு செய்த செய்தியாளர் ராமன் காஷ்யப் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களும் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள், கார், கொலை,

author avatar
seithichurul

Trending

Exit mobile version