தமிழ்நாடு

தவறு நடக்கிறது, தட்டிக்கேட்டேன். பதிலில்லை: காங்கிரஸ் தலைமை குறித்து ஜோதிமணி எம்பி டுவீட்

Published

on

காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைமை மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக பதிவு செய்துள்ள டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பதிவு செய்த ட்வீட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

எனது தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு.

ஜோதிமணியின் இந்த டுவிட்டில் இருந்து பணம் உடைய சிலர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீட் பெற முயற்சித்து வருவதாகவும் உண்மையாக வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு சீட் மறுக்கப்படுவதாகவும் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version