தமிழ்நாடு

ஜோதிமணி எம்பியின் ஆடை கிழிக்கப்பட்டதா? அதிர்ச்சி வீடியோ

Published

on

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டெல்லியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவரை குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காவல்துறை வேனில் சென்று கொண்டிருக்கும் போது எடுத்த வீடியோவை ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்பியாகிய என்னை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும், அதனால் தனது ஆடைகள் கிழிந்ததாகவும் கூறி தனது கிழிந்த ஆடையை அவர் காட்டியுள்ளார்.

மேலும் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்றும் போலீசார் தங்களை ஒரு கிரிமினல் போல் நடத்தி வருவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பாராளுமன்ற சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version