தமிழ்நாடு

கே.டி.ராகவனை கைது செய்யுங்கள்: ஜோதிமணி எம்பி டிஜிபி அலுவலகத்தில் புகார்!

Published

on

பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கேடி ராகவனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கேடி ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானதை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவசரமாக தமிழக பாஜக தலைவரை சந்தித்த கேடி ராகவன், தான் பாஜக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாகவும், சட்டப்படி சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேடி ராகவன் விவகாரம் தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாடு பாஜகவின் கேடி ராகவன் மீது டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் கேடி ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக டிஜிபியிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி எம்பி அவர்கள் ’இதுபோன்ற புகார்கள் பாஜகவினர் மீது எழுவது புதிதல்ல என்றும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவிற்கு எதிராக இதுபோன்ற புகார்கள் வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கேடி ராகவன் உள்பட பாஜகவினர் யார் யாரால் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறையினர் மீது முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த அரசு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசு என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவாதம் கொடுத்துள்ளதால் காவல்துறை இயக்குனரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்/ தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாஜகவினர்களால் பெண்கள் பெருமளவு பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version