தமிழ்நாடு

ஜோதிமணி எம்பியை வெளியே போக சொன்ன திமுகவினர்: கூட்டணி பேச்சுவார்த்தையில் குழப்பம்!

Published

on

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுக நிர்வாகிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் எம்பி ஜோதிமணி திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தார். அப்போது தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திமுக நிர்வாகிகள், ஜோதிமணி எம்பியை வெளியே போங்கள் என்று சொன்னதாக தெரிகிறது.

இதனால் ஆவேசமான ஜோதிமணி எம்பி, ‘நான் என்ன விருந்துக்காக வந்துள்ளேன்? என்னை வெளியே போ என்று எப்படி சொல்லலாம்? என்னை மரியாதை குறைவாக எப்படி நடத்தலாம்? என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் அவரை சமாதானப்படுத்த திமுக நிர்வாகிகள் முயன்ற போதிலும் அவர் வெளியே வந்து ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒருபக்கம் அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ள நிலையில் இன்னொரு பக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது இந்த நிகழ்ச்சியில் இருந்து தெரிய வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் திமுக கொடுத்ததை வாங்கிக் கொண்டு செல்லும் நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version