தமிழ்நாடு

தமிழிசை சர்ச்சை டுவீட்: ஜோதிமணி தக்க பதிலடி!

Published

on

தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததை குறிப்பிட்டு சர்ச்சைக்குறிய வகையில் டுவிட்டரில் பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அப்போது, பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என எதிர்காலத்தில் வருந்துவார்கள் என சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் தமிழிசை. ஆனால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக தமிழிசை கூறினார்.

இந்நிலையில் நேற்று தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில், கார்த்தி சிதம்பரம்-பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு. கலாநிதி வீராசாமி-ராஜ்நாத் சிங்கிடம் மனு. டிஆர்பாலு ரயில்வே மேலாளரிடம் மனு. தயாநிதி தென்னக ரயில் ஆபிசில் மனு. அமேதியில் அமைச்சர் ஸ்மிதிராணி ஒரே மாதத்தில் பலகோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி அசத்தல். பாஜகவை தோற்கடித்த தமிழகம்? இழப்பு??? என பதிவிட்டார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதற்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழிசை? தமிழக மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய உரிமையும், திட்டங்களும் கிடைக்காது என்றா? அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். நீங்கள் துணை நில்லுங்கள். கட்சிகளைவிட மக்களும், தேசமும் முக்கியம் என்றார்.

மேலும், தமிழக மக்களின் ஓயாத உழைப்பில் தமிழகம் இந்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிக வரி செலுத்துகிறது. இருந்தும் ஏற்கனவே14-வது நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. எந்த அரசும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே நிதி ஒதுக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் சகோதரிஎன தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version