கிரிக்கெட்

கப்பு மிஸ் ஆனாலும் விருதுகளை குவித்த ஜோஸ் பட்லர்!

Published

on

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதியபோது ராஜஸ்தான் அணி எந்தவித சவாலும் கொடுக்காமல் குஜராத் அணியிடம் சரணடைந்தது. இதனை அடுத்து குஜராத் மிக எளிதில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முதலாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் அறிமுகப்படுத்தியபோது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் படேல் என்ற போது பலர் ஏளனம் செய்தனர். ஆனால் தொடர் வெற்றி பெற்று வந்த குஜராத் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து தற்போது கோப்பையை வென்றுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் தொடர்ச்சியாக அவுட்டாகி வந்த நிலையில் ஜோஸ் பட்லர் மற்றும் நம்பிக்கை தந்தார். ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் அவுட்டானதை அடுத்து ராஜஸ்தான் தோல்வி உறுதியானது.

இருப்பினும் ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லருக்கு விருதுகள் குவிந்து உள்ளது என்பது ஒரு ஆறுதலான விஷயம். இந்த தொடரில் 84 பவுண்டரிகள் அடித்ததை அடுத்து அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் மிக அதிக ரன்கள் அதாவது 863 ரன்கள் ஜோஸ் பட்ல அடித்ததற்கும் ஒரு விருது கிடைத்தது.

மேலும் ஜோஸ் பட்லருக்கு தொடர் நாயகன் விருதும். கிடைத்தது. சாம்பியன் கோப்பை மிஸ் ஆனாலும் பட்லருக்கு விருதுகள் குவிந்தது, அவருக்கும் அவரது அணிக்கும் ஆறுதலைத் தந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version