விமர்சனம்

ஜோஜி – விமர்சனம்!

Published

on

வீட்டின் அனைத்து அதிகாரமும் உள்ள அப்பா. அவருக்கு மூன்று பசங்க. அப்பாவின் அதிகாரத்தை, பணத்தை அபகரிக்க நினைக்கும் மூன்று மகன்கள். அதில் மூன்றாவது மகன் ஜோஜி செய்யும் ஒரு காரியத்தால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களின் கோர்வை தான் ஜோஜி படத்தின் கதை. அலோ என்ன இவ்ளோ சின்னதா கதையை முடிச்சுட்டீங்கன்னு நீங்க கேட்டிங்கன்னா கதையே அவ்ளோதா இருக்குனும் போது எங்களாள என்ன செய்ய முடியும்?
மகேசிண்ட பிரதிகாரம், தொண்டி முதலும் திரிக்‌ஷியமும் படங்களினி இயக்குநர் தீலீப் போத்தனின் அடுத்த படைப்பு ஜோஜி. முதல் இரண்டு படங்களைப் போல இதிலும் பகத் பாசில்தான் கதாநாயகன். முதல் இரண்டு படங்களைப் போலவே சின்னக் கதை, அதை விவரிக்க காட்சி அமைப்புகள் (கேரளா என்றால் சொல்லவா வேண்டும்), அதற்கு குறைவான கதாபாத்திரங்கள் என வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார் திலீப் போத்தன்.

மேக்பத் கதையின் தழுவல் என்றும் சொல்லப்படுகிறது. பகத் பாசில் தவிர மத்த பாத்திரங்களும் அவர்களுக்கு உரிய பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால், பகத் பாசில் தொடர்ந்து ஒரே மாதிரியான பாத்திரத்தில் ஒரே மாதிரியான நடிப்பைத் தருகிறாரோ என்று தோன்றும் போது கொஞ்சம் அசதி ஏற்படத்தான் செய்கிறது. இன்னும் கொஞ்சம் மாறனும். அல்லது மாற்றம் உள்ள பாத்திரங்களை அவர் தேர்வு செய்து நடிக்க வேண்டும். ஹைப்பர் ஆக்டிவ் இளைஞராக இன்னும் எத்தனை படங்கள் நடிப்பு அரக்கரே. (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்)

படத்தின் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பது இசை. சின்னக் கதைக்கு ஏற்றார் போல அமைந்துள்ள இசையும், ஒளிப்பதிவும் தான். த்ரில்லர் கதை என்று சொன்னாலும் அது இசையில் மட்டுமே தெரிகிறது. ஒளிப்பதிவு கூட லொக்கேசனைக்காட்டத்தான் பயன்படுகிறது. கேரளாவில் என்ன எடுத்தாலும் அழகாகத்தான் இருக்கும் என்பது வேறு கதை.

சின்னக் கதை… கொஞ்சம் சினாக்ஸ் சாப்பிடும் போது ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு படம் பார்க்கலாம் என்று தோன்றினால் இதைப் பார்க்கலாம். மற்றபடி வெளியில் சொல்லப்படும் அளவிற்கு இந்தப் படத்திற்கு ஹைப் எதுவும் இல்லை. கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுக்கப்பட்ட மற்றொரு பகத் பாசில் படம் தான் இந்த ஜோஜி. 2 மணி நேரப்படத்தில் சுவாரஸ்யமாகவோ, திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவோ ஏதும் இல்லை. ஒரே போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. ரயிலில் பயணம் செய்யும் போது எந்த மேடுபள்ளமும் இல்லாமல் வண்டி போய்க்கொண்டே இருக்குமே. தடக்… தடக்… சத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டு அதேபோல இசையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரே மாதிரி கோட்டில் எந்த அசைவும் இல்லாமல் பயணிக்கிறது இந்த ஜோஜி… சேட்டன்களே இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். அமேசானில் இருக்கிறது ஒரு முறை பார்த்துவிடுங்கள்… கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட மற்றொரு பகத் பாசில் படம்..!

Trending

Exit mobile version