தமிழ்நாடு

அண்ணாமலைக்கு போட்டியாக இவர்தான் சரி: ஜோதிமணி எம்பியை டிக் செய்த சோனியா!

Published

on

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பட்டி தொட்டி எங்கும் பாஜகவின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. அவர் நேரடியாக திமுகவுடன் மோதி வருகிறார் என்பதும் அவர் கேட்கும் பல கேள்விகளுக்கு திமுகவின் முன்னணி தலைவர்களே பதில் சொல்ல முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக அதிரடியாக களம் இறங்க வேண்டிய காங்கிரஸ் பெரும்பாலும் அமைதியான போக்கில்தான் உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பல நேரங்களில் முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் மௌனமாகவே உள்ளார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறிவரும் நிலையில் தற்போது அண்ணாமலைக்கு போட்டியாக சவால் விடும் வகையில் ஜோதிமணி எம்பி தான் சரியாக இருப்பார் என்று சோனியா முடிவு செய்ததாகவும் விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் அண்ணாமலை இன்னொரு பக்கம் ஜோதிமணி என வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version