இந்தியா

ஒரு டோஸ் தடுப்பூசி- இந்தியாவிடம் அவசரகால அனுமதி கேட்கும் ஜான்சன்& ஜான்சன்

Published

on

கொரோனாவுக்கு ஒற்றை டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கும்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஒற்றை டோஸ் முறையில் வழங்கும் முயற்சியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஆய்வில் சிறந்த பலன் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி வீரியமான நோயை 85 சதவிகிதம் வரையில் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் போது அடுத்த 28 நாட்களில் அதனது பாதுகாப்பு வீரியமாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். இதனால், இந்தியாவில் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி அளித்து கொரோனாவை இந்தியாவில் இருந்து ஒழிப்பதற்கு உதவ வேண்டும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக, முதலில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய அரசிடம் ஜான்சன் அண்ட் ஜான்சன் முன் வைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version