சினிமா செய்திகள்

John Kokken: துணிவு படம் நடிகர் ஜான் கொக்கன் மற்றும் பூஜா ராமச்சந்திரனின் வளைகாப்பு புகைப்படங்கள்!

Published

on

டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பெரிய பட்ஜெட், நட்சத்திரங்கள் நிறைந்த படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்து வரும் துணிவு மற்றும் கேஜிஎஃப் நடிகர் ஜான் கோக்கன், பிப்ரவரி 9 அன்று தனது மனைவி நடிகை பூஜா ராமச்சந்திரனுடன் வளைகாப்பு நிகழ்வின் இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார். தம்பதியினரை ஆசிர்வதிப்பதற்காக, நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியானது பாரம்பரிய சடங்காக, குடும்ப உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டது. சாமந்திப் பூக்களுடன் மஞ்சள் அலங்காரப் பின்னணியில் காட்சியளிக்கும் படங்களில் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்க்கையின் புதியப் பயணத்தைத் தொடங்குவதில் மிகவும் உற்சாகமாக இருக்கும் ஜான் கொக்கன் மற்றும் பூஜா ராமச்சந்திரன் இருந்தனர். அவர்கள் இருவரும் பாரம்பரிய உடைகளை அணிந்து மாலைகளை மாற்றிக்கொண்டனர்.

அனிஷ் ஜான் கொக்கெனாக மும்பையில் பிறந்து, 41 வயதான மாடலும் நடிகருமான இவர் 2019 ஆம் ஆண்டு VJ நடிகை பூஜா ராமச்சந்திரனை மணந்தார். இந்த ஜோடி உடற்பயிற்சி மற்றும் அவர்களின் பயண சாகசங்கள் வீடியோக்களை சமூக வளைதளத்தில் பகிர்வார்கள் .அவர்கள் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கின்றனர்.

ஜான் கோக்கன் இதற்கு முன்பு நடிகை மீரா வாசுதேவனை 2012 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிரிந்தனர் .மீரா மற்றும் ஜானுக்கு அரிஹான் ஜான் என்று ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version