செய்திகள்

பலத்த பாதுகாப்புடன் பைடன் பதவியேற்பு

Published

on

வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியில் இருந்து ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் படுதோல்வியைச் சந்தித்தார். ட்ரம்ப்பின் தோல்வியை ஒத்துகொள்ளாததால் அவரும் அவரது தொண்டர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளனர். இந்திய நேரப்படி 11.30 மணியளவில் பதவி பிரமாண விழா நடைபெற உள்ளது. வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதால் அங்கு விழாக்கோலம் போல காட்சியளிக்கிறது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்விழாவில் பல்வேறு மூத்தத் தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர். குறிப்பாக முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேறவுடன் இராணுவ மரியாதையுடன் வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்லப்படுவர்.

தற்போது நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி 25 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினரும் 4 ஆயிரம் காவல்துறையினரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். சமீபத்தில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வந்தார். அப்போது நாடாளுமன்றத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனால் அவரது டூவிட்டர் மற்றும் யூடியுப் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. எனவே தற்போதும் பதவி ஏற்பு விழாவில் கலவரம் நடக்கக்கூடும் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கலவரம் செய்பவர்களை கண்டால் உடனடியாக துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

Trending

Exit mobile version