சினிமா செய்திகள்

ஜோதிகாவின் ஜாக்பாட் ரூட் இனிமே இதுதானாம்!

Published

on

கதாநாயகிக்கு முக்கியதுவம் வாய்ந்த படங்களில் நடித்து வரும் ஜோதிகா தற்போது இரா. சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

கல்யாண் இயக்கத்தில் சமிபத்தில் வெளியான ஜாக்பாட், கடந்த மாதம் வெளியான ராட்சசி என புதுமை வாய்ந்த கதைகளை தேர்தெடுத்து நடித்துவருகிறார். அடுத்து புதுமுக இயக்குனர் ஜெ.ஜெ. ஃப்பெடரிக் இயக்கத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்திலும், மேலும் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கத்துக்குட்டி பட இயக்குனர் இரா. சரவணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில் ஜோதிகாவுன் இணைந்து பணியாற்ற சமுத்திரக்கனி, சசிகுமார், சூரி ஆகியோர் ஓப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version