வணிகம்

அமெரிக்காவில் வேலையின்மை உரிமைகோரல்கள் விகிதம் 3 மாதங்கள் இல்லாத அளவிற்குச் சரிவு!

Published

on

இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக வங்கிக் கணக்கில் நேரடியாக உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அதே போல அமெரிக்காவிலும் வேலை இல்லாதவர்கள் மற்றும் வேலையை இழந்தவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது.

அதற்கான உரிமைக் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் மட்டும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் எண்ணிக்கையானது 43 சதவிகிதம் வரை சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,04,000 ஆக இருந்து வந்த வேலை இல்லாதவர்கள் மற்றும் வேலை இழந்தவர்களுக்கான உரிமைகோரல் டிசம்பர் மாதம் இறுதியில் 19000 ஆக சரிந்துள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே மிகப் பெரிய சரிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version