வேலைவாய்ப்பு

கடற்படையில் பயிற்சியுடன் வேலை!

Published

on

கடற்படையில் கமிஷன் ஆபீஸர் (எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் எஜூகேசன் பிராஞ்ச், டெக்னிக்கல் பிராஞ்ச்) ஜூன் – 2020 என்ற பயிற்சியில் சேர, திருமணமாகாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன.

மொத்த காலியிடங்கள்: 121

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. எக்சிகியூட்டிவ் பிரிவு – 55
2. டெக்னிக்கல் பிரிவு – 48
3. கல்வி பிரிவு – 18

வயது : விண்ணப்பதாரர்கள் 19½ முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1995 மற்றும் 01.01.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். கல்வி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 02.07.1995 மற்றும் 01.07.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பெற்றிருக்க வேண்டும்.

உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி. மூலம் நடத்தப்படும் முதல்நிலை, இரண்டாம் நிலை என இரு நிலை தேர்வுகள் மற்றும் நுண்ணறிவுத் தேர்வு, கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வுகளவ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindian navy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.joinindian navy.gov.in என்ற இணையதளத்தில் மூலம் பார்க்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.05.2019

seithichurul

Trending

Exit mobile version