வேலைவாய்ப்பு

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை!

Published

on

தலைநகர் டில்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 26. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 26

வேலை: Junior Research Fellow

மாத சம்பளம்: ரூ.25,000 வழங்கப்படும்.

வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: Chemistry, Organic Chemistry, Inorganic Chemistry, Analytical Chemistry, Environment Science துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றுக் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Central Pollution Control Board (CPCB) Head Office, Delhi

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.06.2019

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களைப்பற்றிய பயோடேட்டாவை தயார் செய்து அதனுடன் சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk0XzE1NTk5MDg2MDFfbWVkaWFwaG90bzEyMjEzLnBkZg== என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Trending

Exit mobile version