வேலைவாய்ப்பு

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் (TNUSRB) காலியாக உள்ள 10,906 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)

மொத்த காலியிடங்கள்: 10,906

வேலை: சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. இரண்டாம் நிலை காவலர் – 10329
2. இரண்டாம் நிலைசிறைக் காவலர் – 119
3. தீயணைப்பாளர் – 458

1. காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 3099.
இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே)

2. சிறைத்துறை : இரண்டாம் நிலை சிறைக்காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.

3. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்).
இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 (பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்).

வயது: 01.07.2020 தேதியின் படி, 18 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.18,200 முதல் ரூ.52.900 வரை இருக்கும்.

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல் அளவீட்டுச் சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: ரூ.130 செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

1. விளம்பர நாள் 17.09.2020

2. இணைய வழி விண்ணப்பம் பதிவெற்றம் துவங்கும் நாள் 26.09.2020

3. இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 26.10.2020

4. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 13.12.2020

விண்ணப்பிக்கும் முறை: https://tnusrbonline.org/ என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள:

1.https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf

2.https://tnusrbonline.org/pdfs/CR_2020_Brochure.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.09.2020 to 26.10.2020.

seithichurul

Trending

Exit mobile version