வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் வேலை!

Published

on

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலகத்தில் காலியிடங்கள் 08 உள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: அலுவலக உதவியாளர் – 07
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்ட தெரிந்திதிருக்க வேண்டும்.

வேலை: ஓட்டுநர் – 01
மாத சம்பளம்: ரூ.19.500 – 62000
கல்வித்தகுதி: 8 ஆம் வதுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணுப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை – 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/announcement/OA_Driver_advt_application_021219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019

Trending

Exit mobile version