வேலைவாய்ப்பு

மத்திய பாதுகாப்புப் படையில் வேலை!

Published

on

மத்திய பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் 1412 உள்ளது. இதில் தலைமைக் காவலர் வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force)

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 1412 (ஆண்-1331, பெண்-81)

வேலை: தலைமைக் காவலர் (Head Constable (General Duty))

மாத சம்பளம்: ரூ. 25,500 முதல் 81,100 வரை.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுக் குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்புப் படையில் வேலை செய்திருக்க வேண்டும்.

வயது: 32 வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.crpf.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.03.2020

Trending

Exit mobile version