வேலைவாய்ப்பு

கூட்டுறவுச் சங்கத்தில் வேலை!

Published

on

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியிடங்கள் 30 உள்ளது. இதில் உதவியாளர், இளநிலை உதவியாளர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 30

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: உதவியாளர்
காலியிடங்கள்: 176
மாத சம்பளம்: ரூ.18,800 – 56,500
சங்கம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை- 1

வேலை: உதவியாளர்
காலியிடங்கள்: 57
மாத சம்பளம்: 13,000 – 45,460
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை – 4

வேலை: உதவியாளர்
காலியிடங்கள்: 58
மாத சம்பளம்: ரூ.15,000 – 62,000
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18

வேலை: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 06
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800
சங்கம்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். சென்னை – 10

வேலை: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 03
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
சங்கம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை – 93

வயது: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ இணையதளத்தில் உள்ள “SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான வசதி மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.11.2019

seithichurul

Trending

Exit mobile version