வேலைவாய்ப்பு

வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலை!

Published

on

இந்தியா முழுவதும் தற்போது வங்கி பணியாளர் தேர்வு வாரியம் IT-Administrator, Assistant Professor and Faculty Research Associate ஆகிய வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: IT-Administrator
வயது: 21 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Assistant Professor
வயது: 45க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Faculty Research Associate
வயது: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வேலை அனுபவம்: சம்மந்தப்பட்ட வேலைகளில் 3 முதல் 5 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புப்படி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

கட்டணம்: அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://ibpsonline.ibps.in/ibpsafidec19 என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.12.2019

seithichurul

Trending

Exit mobile version