வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலை!

Published

on

இந்திய கடற்படையில் ‘குரூப் சி’ பிரிவு அலுவலகப் பணியிடங்களான 554 டிரேட்ஸ்மேன் மேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 554

வேலை: டிரேட்ஸ்மேன் மேட்

வயது: 15.03.2019 தேதியின்படி 18 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்று, சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்துச் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.205 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.joinindiannavy.gov.in அல்லது www.indiannavy.nic.in ஆகிய இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.03.2019

Trending

Exit mobile version