வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலை!

Published

on

இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 115. இதற்கு தகுதியான முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

வேலை: Security Guard-cum-peon

மொத்த காலியிடங்கள்: 115 (தமிழ்நாட்டிற்கு 48)

மாத சம்பளம்: ரூ.9,560 – 18,545

வயது: 01.07.2019 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முப்படைகலில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.indianbank.in/wp-content/uploads/2019/10/Detailed-advertisement-for-recruitment-of-Security-Guard-cum-Peon.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2019

Trending

Exit mobile version