வேலைவாய்ப்பு

இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை!

Published

on

இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியிடங்கள் 1817 உள்ளது. இதில் எம்டிஎஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 1817

வேலை: Multi Tasking Staff (MTS)

கல்வித்தகுதி: 23.01.2020 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 23.01.2020 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோருவோருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.

மாத சம்பளம்: ரூ.18,000 – 56,900

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 23 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2020

Trending

Exit mobile version