வேலைவாய்ப்பு

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் வேலை!

Published

on

தமிழக அரசின் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியிடங்கள் 20 உள்ளது. இதில் உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சென்னை

மொத்த காலியிடங்கள்: 20

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: அலுவலக உதவியாளர் – 02

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வேலை: சமையலர் – 03
வேலை: மருத்துவமனை பணியாளர் – 09
வேலை: கிளீனர்: – 01
வேலை: துப்புரவு பணியாளர் – 05

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

வயது: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. OC பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும், BC, MBC பிரிவினர்32க்குள்ளும், SC,ST பிரிவினர் 35க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை: இந்த வேலையில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி அரும்பாக்கம் சென்னை – 600 106 என்ற அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும் விண்ணப்பித்த பெற்று, அதனைப் பூர்த்திச் செய்து மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.12.2019

seithichurul

Trending

Exit mobile version