வேலைவாய்ப்பு

தமிழகத் தொடக்கக் கல்வித் துறையில் வேலை!

Published

on

தமிழகத் தொடக்கக் கல்வித் துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 97. இதில் வட்டார கல்வி அதிகாரி வேலைக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 97

வேலை: Block Educational Officer

கல்வித்தகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, சூழ்நிலையியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று கல்வியியல் (பி.எட்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாத சம்பளம்: ரூ.36,900 – 1,16,600

வயது: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.nic.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/beo2019/beo.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Trending

Exit mobile version