வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் வேலை!
இந்திய ராணுவத்தில் ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ எனும் மருத்துவப் பிரிவில் பல் மருத்துவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் காலியிடங்கள் 65 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
பிரிவு: ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’
மொத்த காலியிடங்கள்: 65
வயது: 31.12.2019 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பல் மருத்துவத் துறையில் பி.டி.எஸ்., எம்.டி.எஸ். முடித்துப் பல் மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பி.டி.எஸ் முடித்தவர்கள் இறுதி ஆண்டில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.06.2019