வேலைவாய்ப்பு

தில்லி காவல் துறையில் வேலை!

Published

on

தில்லி காவல் துறையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 554. இதில் தலைமைக்காவலர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 554

வேலை: Head Constable
1. ஆண்கள் – 372
2. பெண்கள் – 182

மாத சம்பளம்: ரூ.25,500 – 81,100

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி:

ஆண்கள் – உயரம் 165 செ.மீட்டாரும், 76 செ.மீட்டர் மார்பளவும், 4 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் – உயரம் 157 செ.மீட்டர் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.delhipolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்காலப் பயன்பாட்டிற்காக அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிய www.delhipolice.nic.in  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.11.2019

Trending

Exit mobile version