வேலைவாய்ப்பு

கொச்சி ஷிபியார்ட் நிறுவனத்தில் வேலை!

Published

on

கப்பல் கட்டு நிறுவனமான கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 671. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited)

மொத்த காலியிடங்கள்: 671

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Fabrication Assistants – 47
மாத சம்பளம்: ரூ.18,400
வேலை: Outfit Assistants – 543
வேலை: Scaffolder – 19
வேலை: Aerial Work Platform Operator – 02
மாத சம்பளம்: ரூ.17,400
வேலை: Semi-Skilled Rigger – 40
வேலை: General Worker – 20
மாத சம்பளம்: ரூ.13,700

கல்வித்தகுதி: IV, VII ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ITI மதிப்பெண், NAC மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு இணையதளத்தில் Vacancy Notification என்ற அறிவிப்பில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாகப் படித்துப் பின்னர் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cochinshipyard.com/career/Vacancy%20notification%20-%20Contract%20workmen%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.11.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version