வேலைவாய்ப்பு

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்கள் 34 உள்ளது. இதில் டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் அலுவலர், டெக்னிக்கல் உதவியாளர், நிதி மற்றும் கணக்காளர் வேலைக்கான சிறப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 34

வேலை செய்யும் இடம்: சென்னை தமிழ்நாடு

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Sr. Technical Officer – 03
மாத சம்பளம்: ரூ.67,700

வேலை: Technical Officer – 03
மாத சம்பளம்: ரூ.56,100

வேலை: Asst. Technical Officer – 04
மாத சம்பளம்: ரூ.44,900

வேலை: Technical Assistant Gr.III (Tool Room /Testing /Processing/Design(CAD-CAM-CAE)) – 01
மாத சம்பளம்: ரூ.67700

வேலை: Sr. Officer (Finance & Accounts) – 02
மாத சம்பளம்: ரூ.56,100

வேலை: Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts – 04
மாத சம்பளம்: ரூ.44,900

வேலை: Asst. Officer (i) Personnel & Administration (ii) Finance & Accounts – 12
வேலை: Administrative Assistant Gr. III – 02
வேலை: Accounts Assistant Gr. III – 03
மாத சம்பளம்: ரூ.21,700

கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வணிகவியல், பொது நிர்வாகவியல், மேலாண்மை துறையில் முதுகலை, எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்ஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல், வேதியியல், பாலிமர், பிளாஸ்டிக் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.எம்டெக் முதல் வகுப்பில் முடித்து 2 அல்லது 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 32 – 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Principal Director (New Projects), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600 032”

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.cipet.gov.in/job-opportunities/downloads/16-11-2019-001/Advertisement_SC_ST_R.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.12.2019

seithichurul

Trending

Exit mobile version