வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 10 உள்ளது. இதில் திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் போன்ற வேலைகளை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:10

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Technology Commercialization Officer – 01
கல்வித்தகுதி: அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மைத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்து 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.1,00,000

வேலை: Technology Commercialization Executive – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.35,000

வேலை: Project Associate – 04
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.26,000

வேலை: Project Assistant – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.20,000

வேலை: Office Assistant cum driver – 01
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.16,000

விண்ணப்பிக்கும் முறை: ctdt.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துவிட்டு அதனைப் பதிவிறக்கம் செய்து அதனுடன் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai 600025.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://ctdt.annauniv.edu/downloads/recruitmenttec.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.11.2019

seithichurul

Trending

Exit mobile version