வேலைவாய்ப்பு

நேரு யுவகேந்திராவில் இளைஞர்களுக்கு வேலை!

Published

on

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா சங்கேதனில் நிரப்பப்பட உள்ள 225 மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 225

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: District Youth Coordinator (DYCs) – 100
வேலை: Accounts Clerk cum Typist (ACTs) – 73
வயது: 01.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Multi Tasking Staff (MTS) – 52
வயது: 01.01.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், பிளஸ் 2 முடித்துத் தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.700. ஓபிசி பெண்கள் ரூ.350. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://nyks.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://nyks.nic.in/recruitment/GuidelinesEnglish15032019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2019

Trending

Exit mobile version