தமிழ்நாடு

சென்னையில் ஜனவரி 20ல் வேலைவாய்ப்பு முகாம்.. எந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்?

Published

on

சென்னையில் வரும் 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதை அடுத்து இதில் பங்கு கொள்ளும் வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்கள் மற்றும் வேலை கொடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டிய இணையதளம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வேலையில்லாமல் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் அவ்வப்போது வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்ததே.

அந்த வகையில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சித்துறை சார்பில் சென்னையில் வரும் 20ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.

சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு மற்றும் இந்த முகாமில் வேலை கொடுக்கும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை படித்தவர்கள் அவரவர் தகுதிக்கேற்க இந்த முகாமில் வேலை கிடைக்கும் என்றும் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ளதால் வேலை தேடுபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவாராவ் அவர்கள் கூறிய போது தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

அந்த வகையில் சென்னையில் 20-ம் தேதி வேலைவாய்ப்பு நடைபெற முகாம் நடைபெற உள்ளது. 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட உள்ளதால் இந்த முகாம் மூலம் படித்து வேலையில்லாமல் இருக்கும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு எந்த விதமான கட்டணமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version