வேலைவாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

Published

on

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியிடங்கள் 30 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 30

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: IITM Research Associates
காலியிடங்கள்: 10
வயது: 15.05.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: Physics, Applied Physics, Atmospheric Sciences, Meteorology, Oceanography, Climate Science, Geophysics with Meteorology, Environmental Sciences, Electronic, Chemical Sciences, Chemistry, Physical Chemistry. Inorganic Chemistry, Organic Chemistry, Mathematics, Applied Mathematics, statistics போன்ற ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ. 47,000 + வீட்டு வாடகைப்படி

வேலை: IITM Research Fellows
காலியிடங்கள்: 20
வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 12 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Meteorology, Atmospheric Sciences, Oceanography, Physics, Applied Physics, Geophysics, Mathematics, Applied Mathematics, Statistics போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்று, நெட், கேட் போன்ற ஏதாவதொரு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.31,000 + வீட்டு வாடகைப் படி தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலை நியமன ஆணை வழங்கப்படும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கான https://www.tropmet.res.in/jobs_pdf/1555419046advtPER-05-2019.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.05.2019

seithichurul

Trending

Exit mobile version